நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நகைகள் கொள்ளை போனதாக
நயாடகமாடிய பெண் கள்ளக்காதலனுடன் கைது


October 23, 2015 at 4:08 pm

ஸ்ரீல்லிபுத்தூர், அக். 24

ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்திமுனையில் கொள்ளையன் நகைகளை பறித்துச் சென்றதாக பொய்ப் புகார் கூறிய பெண்ணும், அவரது கள்ளக்காதலனும்  கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது  மனைவி பிரியா (21). கடந்த 17&ம் தேதி வீட்டில் இருந்த பிரியாவிடம் இருவர் வந்து கத்தியைக் காட்டி 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது குறித்து நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வேணுகோபால் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்தினர். 

புகார் தெரிவித்த பிரியாவுக்கு திருமணத்துக்கு முன்பே அதே பகுதியைச் சேர்ந்த ஞானவேல் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ஞானவேல் துபாய் சென்றுவிட்டார். பிரியாவுக்கு விஜயகுமாருடன் திருமணம் நடந்து குழந்தை உள்ளது. இந்நிலையில் 4 மாதத்திற்கு முன்பு ஞானவேல் ஊர் திரும்பியுள்ளார்.

தனது பழைய தொடர்பை பிரியா புதுப்பித்துள்ளார். இந்நிலையில் தனது அண்ணன் திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதாக ஞானவேல் பிரியாவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து 4 பவுன் செயின், கால் கிலோ வெள்ளி பொருள்களை ஞானவேலிடம் கொடுத்துள்ளார். பின்னர் தனக்குத் தானே கையில் கத்தியால் கீறிவிட்டு, நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

பிரியா மற்றும் ஞானவேலை போலீசார் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2&ல் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி பசும்பொன் சண்முகையா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


  • Chitra

    - October 24, 2015 at 8:22 am

    இவா்களுக்கு இதுதான் வேலை.












Latest News