தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை  ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம்  
 


March 14, 2024 at 6:14 pm

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் பிரதமர், அங் கிருந்து கன்னியாகுமரி வருகிறார். விமான நிலையத்தில் அண்ணா மலை, எல். முருகன் உள்ளிட் டோர் பிரதமரை வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரும் பிரதமர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல் கிறார். அரசு விருந்தி னர் மாளி கையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக் கூட்ட மைதானத்திற்கு செல்கிறார்.காலை 11.15 முதல் 12.15 வரை விவே கானந்தர் கல்லூரியில் நடை பெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற் கிறார். இந்த பொதுக் கூட்டம் முடிவடைந்து, பகல் 12.15க்கு அவர் மீண்டும் ஹெலி காப்டர் மூலம் திரு வனந்தபுரம் செல் கிறார். மீண்டும் 6வது முறையாக வருகிற 18ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கோ வை யில் நடக் கும் கூட்டத்தில் பேசு கிறார். 19ம் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 22ம் தேதி மதுரைக்கும் வர உள்ளதாக கூறப் படுகிறது. பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவ தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ் தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டு வளை யத்துக்குள் கொண்டு வரப் பட் டுள்ளது. இதைத் தொடர்ந்து, கன்னி யாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை கன்னி யாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள் ளார். நாளை காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை குமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட் டத்துக்கு வருகை தரும் வாகனங்கள் சர வணந்தேரி வரை அனுமதிக் கப்படு வார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. குமரி ரவுண்டானாவில் இருந்து புனித அந் தோனியார் மேல் நிலைப்பள்ளி வரை வாகனம், பாதசாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் அனைத்தும் குமரி ரயில் நிலையத்துக்கு முன்பு நிறுத்தி இயக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News