நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பெரியகுளத்தில் அதிமுக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு


March 22, 2024 at 5:34 pm

  தேனி, மார்ச்.22-      

                       தேனி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.டி. நாராயணசாமி,  பெரியகுளம் அருகே ஜி. கல்லுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, கெங்குவார் பட்டி, தேவதானப்பட்டி வடுகபட்டி தென்கரை பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை, வேட்பாளர் வி.டி. நாராயணசாமி நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற ஆதரவு தெரிவிக்குமாறு கூறினார். இந்த நிகழ்வில், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய செயலாளருமான அன்னப் பிரகாஷ், கெங்குவார்பட்டி பேரூர் கழக செயலாளர் தினேஷ்குமார், தேவதானப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் ஜாபர் அலி, எஸ். டி. பி. ஐ. நகர நிர்வாகிகள், தேமுதிக பேரூர் கழகச் செயலாளர் அப்துல் சலாம், வடுகபட்டி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜகுரு, தாமரைக்களம் பேரூர் கழக செயலாளர் மனோகர், பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன், நகர்மன்ற வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.    

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News