நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பு

 


April 9, 2024 at 5:59 pm

சென்னை: திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்.6ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.      

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News