நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
 


May 24, 2024 at 4:57 pm

  நாகர்கோவில் மே 24  கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக விடிய விடிய மழை பெய்தது மழையின் காரணமாக பேச்சிப்பாறை  அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடுவது அதிகரிக்கப்பட்டுள்ளதுமழையின் காரணமாக மாவட்டத்தில் இதுவரையிலும் 14 வீடுகள் சேதம் அடைந்துள்ளது  வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறதுமூன்றாவது நாளாக மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததுநேற்று காலை 6:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  பேச்சிப் பாறை அணைப்பகுதியில் 75.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது கன்னிமார் பகுதியில் 27.44 மில்லி மீட்டரும் கொட்டாரத்தில் 40.4 மில்லி மீட்டரும் மயிலாடியில் 37.2 மில்லி மீட்டரும் நாகர்கோவிலில் 36.6 மில்லி மீட்டரும் ஆரல்வாய் மொழியில் 16 மில்லி மீட்டரும் பூதப்பாண்டியில் 23.6 மில்லி மீட்டரும்  முக்கடல் அணை பகுதியில் 22.4 மில்லி மீட்டரும் பாலமோரில் 52.4 மில்லி மீட்டரும் தக்கலையில் 29 மில்லி மீட்டரும் குளச்சலில் 30 மில்லி மீட்டரும் இரணியலில்  25 மில்லி மீட்டரும் அடையாமடையில் குருந்தன் கோட்டில் 57.3 மில்லி மீட்டரும்  கோழி போர் விளையில் 32.8 மில்லி மீட்டரும் மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 51 மில்லி மீட்டரும் சிற்றாறு ஒன்று அணைப்பகுதியில் 54.4 மில்லி மீட்டரும் சிவலோகத்தில் 49.6 மில்லி மீட்டரும் களியலில் 14.6 மில்லி மீட்டரும் குழித்துறையில் 12.7 மில்லி மீட்டரும் பெருஞ்சாணி அணைப்பகுதியில் 53.2 மில்லி மீட்டரும் புத்தன் அணைப்பகுதியில் 52.6 மில்லி மீட்டரும் சுருளோட்டில் 47.4 மில்லி மீட்டரும்  ஆணைக்கிடங்கில் 49.4 மில்லி மீட்டரும் திற்பரப்பில் 42 மில்லி மீட்டரும் முள்ளங்கினாவிளையில் 42.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது மழை காரணமாக மாவட்டத்தில் 14 வீடுகள் பகுதி அளவில் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன மழையைத் தொடர்ந்து பேச்சிப்பாறை அணைக்கு 1986 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 1409 கன அடி தண்ணீரும் சிற்றாறு ஒன்று அணைக்கு 289 கன அடி தண்ணீர் சிற்றாறு 2 அணைக்கு 426 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து மதகுகள் வழியாக 532 கன அடி தண்ணீரும் உபரி நீர் போக்கி மூலம் 1800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் கால்வாய் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News