தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

 


May 24, 2024 at 5:04 pm

 நாகர்கோவில் மே 24 கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில்தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு மூன்று மேஜைகள் வீதம்போடப்பட்டு 500 ஓட்டுகள் வீதம்  எண்ணப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில்  கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிநெறிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர்,  கூறியதாவது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் காலை 08.00 மணியளவில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் மூன்று மேஜைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றில் 500 வாக்குகள் வீதம் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியர் நிலையில் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வரும், ஒரு வாக்கு எண்ணிக்கை முகவரும் நியமிக்கப்படுவார். மேலும் 04.06.2024 அன்று காலை 8.00 மணிக்கு முன்னர் வரை பெறப்படும் அனைத்து அஞ்சல் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு எடுத்து வரப்பட்டு, அஞ்சல் வாக்கு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படும். காலை 8.00 மணிக்கு பின்னர் பெறப்படும் அஞ்சல் வாக்குச்சீட்டுக்களை திறக்கக் கூடாது. அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கென தனியே ஒரு உறையில் வைக்கப்பட வேண்டும். அஞ்சல் வாக்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படும். ஷிமீக்ஷீஸ்வீநீமீ க்ஷிஷீtமீக்ஷீs ணிஜிறிஙிஷி அஞ்சல் வாக்குச்சீட்டுகள். ளிtலீமீக்ஷீ tலீணீஸீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ க்ஷிஷீtமீக்ஷீs பொதுவான அஞ்சல் வாக்குச்சீட்டுகள் ஆகும். முதலில் அனைத்து இளஞ்சிவப்பு நிற படிவம்-13சி (சிஷீஸ்மீக்ஷீ ஙி) களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். படிவம்-13சி-ஐ பிரித்தவுடன் அதில் படிவம்-13கி (ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ) மற்றும் படிவம்-13ஙி (சிஷீஸ்மீக்ஷீ கி) இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின். 13கி உறுதிமொழி படிவத்தில் அஞ்சல் வாக்குச்சீட்டின் வரிசை எண், வாக்காளரின் கையொப்பம், சான்றொப்பம் இடும் அலுவலரின் கையொப்பம் மற்றும் அலுவலக பதவி உள்ளிட்ட விவரங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவம்-13கி-ல் சான்றொப்பம் இடும் அலுவலரின் கையொப்பத்தின் கீழ் அவரது பதவிக்கான முத்திரை இடவில்லையென்றாலும், அவரது பதவி மற்றும் அலுவலகம் குறித்த விவரம் எழுதப்பட்டிருந்தால் போதுமானது. பின் படிவம்-13ஙி (சிஷீஸ்மீக்ஷீ கி)-ன் மீது அஞ்சல் வாக்குச்சீட்டின் வரிசை எண் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வரிசை எண் படிவம் 13-கி-ல் குறிப்பிட்டுள்ள வரிசை எண்ணுடன் ஒத்திருக்கவேண்டும். பின், பிரிக்கப்பட்ட படிவம்-13சி-ஐ தனியே ஒரு அட்டை பெட்டியில் இடவும். அதற்குரிய படிவம்-13கி-வை ஒரு ஜிக்ஷீணீஹ்-ல் வரிசையாக அடுக்கவும். அதற்குரிய படிவம்-13ஙி (சிஷீஸ்மீக்ஷீ கி)-ஐ மற்றொரு ஜிக்ஷீணீஹ்-ல் வரிசையாக அடுக்கவும். மேற்கண்ட நடைமுறையில் செல்லாத வாக்குகளாக கண்டறியப்பட்ட அஞ்சல் வாக்குகளை அதற்குரிய படிவம்-13கி மற்றும் படிவம்- 13ஙி-ஐ மீண்டும் படிவம்-13சி (சிஷீஸ்மீக்ஷீ ஙி)-ல் தனியே அதற்குரிய ஜிக்ஷீணீஹ்-ல் வைக்க வேண்டும். அஞ்சல் வாக்குச்சீட்டுடன் படிவம்-13கி உறுதிமொழி (ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ) இல்லை எனில், படிவம்-13கி உறுதிமொழி படிவத்தில் சான்றொப்பம் இடும் அலுவலரின் கையொப்பம் இல்லையென்றாலும், வாக்காளரின் கையொப்பம் இல்லையென்றாலும், படிவம்-13கி-ல் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணும், படிவம்-13ஙி-ல் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணும் வேறுபாடாக இருந்தால், படிவம்-13கி-ஐ தனியாக வைக்காமல் படிவம்-13ஙி உறையின் உள்ளே வைத்திருந்தால், அஞ்சல் வாக்குச்சீட்டு படிவம் 13ஙி-உறையினுள் இல்லாமல் வெளியில் இருப்பின், அஞ்சல் வாக்குச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்தால், அஞ்சல் வாக்குச்சீட்டில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை எனில், போலியான அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் எனில், சேதமான, கிழிந்த நிலையில் உள்ள மற்றும் முற்றிலும் கசக்கப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் தள்ளுபடி செய்யலாம். (இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்அனுமதி பெற வேண்டும்). மேற்கண்ட காரணங்களினால் நிராகரிக்கப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகளின் படிவம்-13சி-உறை அல்லது படிவம்-13ஙி-உறையின் மீது உரிய ரப்பர் ஸ்டாம்ப் இட்டு அதற்கான காரணத்தினை "டிக்" செய்ய வேண்டும். இதே முறைப்படி ஒரு மேஜைக்கு வழங்கப்பட்ட 500 அஞ்சல் வாக்குகளையும் பிரித்து அடுக்கிய பின் அவற்றிற்குரிய அனைத்து படிவம்-13கி-களை ஒரு தனி உறையில் இட்டு சீலிடவும், பின் அனைத்து படிவம்-13ஙி- களையும் எடுத்து ஒன்றின் பின் ஒன்றாக பிரித்து அதிலுள்ள அஞ்சல் வாக்குச்சீட்டுக்களை வெளியில் எடுக்கவும். அதில் பதிவாகியுள்ள வாக்கு விவரத்தை அனைத்து முகவர்களிடமும் காண்பித்து அதனை சம்மந்தப்பட்ட வேட்பாளரின் பெயர் கொண்ட றிவீரீமீஷீஸீ பிஷீறீமீ-ல் இடவும். படிவம்-13சி-ல் அனுப்புனர் கையொப்பம் இடவில்லை என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிரே எந்த ஒரு குறியீட்டை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். அக்குறியீடு அந்த வேட்பாளருக்கு வாக்களித்ததை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இவ்வாறு 500 வாக்குகளையும் பிரித்து அதற்குரிய றிவீரீமீஷீஸீ பிஷீறீமீ-ல் இட்ட பின் முதல் சுற்று முடிவு பெறும். முதல் சுற்று முடிவுற்றவுடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவாகியுள்ள அஞ்சல் வாக்குகளை 50 எண்ணிக்கை கொண்ட கட்டுக்களாக கட்டி அதனை எண்ணி முதல் சுற்று முடிவினை அறிவிக்க வேண்டும். இதே முறையில் ஒவ்வொரு சுற்றிலும் 500 வாக்குகள் வீதம் ஒவ்வொரு மேஜையிலும் எண்ணி முடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து அஞ்சல் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்கு விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பின்னர், வேட்பாளர்கள் பெற்ற அஞ்சல் வாக்குகளின் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்க வேண்டும்.    

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News