நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சமத்துவ மக்கள் கழகம் சார்பில சமத்துவ பொங்கல் விழா

 


January 10, 2025 at 6:31 pm

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்- நாடார் பேரவை சார்பில்  தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார் நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருள் சுரேஷ்குமார் வடக்கு மாவட்ட தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தனர் மகளிர் அணி நிர்வாகிகள் குருவம்மாள், சந்திரா, ஜேசுசெல்வி, ராதா லட்சுமி இஜெபராணி, ராசாத்தி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொங்கலிட்டனர்  விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர்  கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  இவ்விழாவில் நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர், சூசைமுத்து மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்  இளைஞரணி செயலாளர் முருகன் தொண்டரணி செயலாளர் முத்து செல்வம் வர்த்தக அணி செயலாளர்  சிவசு.முத்துக்குமார் விவசாய அணி செயலாளர் கனகராஜ் தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன் துணைச் செயலாளர் சந்திரசேகர் வர்த்தக ரணி துணைச் செயலாளர் கணபதி, சங்கரன் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சதீஷ் மூர்த்தி, அமல்ராஜ், அந்தோணி ராஜ், மாநகர வார்டு செயலாளர் பென்கர், சுந்தர்ராஜ், செந்தூர்பாண்டி, ராமஜெயம், செல்வராஜ் இசண்முக குமார், முருகேசன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.    

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News