தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

தமிழகத்தில் 28ம் தேதி பருவமழை தொடங்கும்
வானிலை ஆய்வு மையம் தகவல்


October 23, 2015 at 4:05 pm

சென்னை, அக். 24

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வருகிற 28ம்தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதா வது:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழையும், சிவகிரியில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி வருகிற 26ம்தேதி உருவாகும் சூழ்நிலை காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை 28ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு  உள்ளது.

ஆண்டுக்கு தமிழகத்துக்கு சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக இயல்பான மழை அளவை விட சற்று குறைவாகவே பெய்துள்ளது. கடந்த ஆண்டு சராசரி மழை அளவிற்கு 2 சதவீதம் குறைவாக பெய்து இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 33 சதவீதம் மழை அளவு குறைவாக பெய்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News