தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

நாகரில் மாடியில் இருந்து தவறி விழுந்த
4 வயது குழந்தை பலி


October 23, 2015 at 5:30 pm

நாகர்கோவில், அக்.24

நாகர்கோவிலில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

ராஜஸ்தான் மாநிலம் பல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்சிங் (38). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் நாகர்கோவில், வடிவீஸ்வரம், கல்மடத் தெருவில் அடுக் குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த 21ம் தேதி ஆயுதபூஜையன்று இவரது 4 வயது  குழந்தை சந்திரவால் 3வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தை கால்தவறி கீழே விழுந் தது. குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அந்த குழந்தையை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


  • sekar

    - October 24, 2015 at 9:21 am

    குழந்தையை கவனிக்காமல் என்ன saitharkal












Latest News