தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

நாகர்கோவிலில் மினிலாரி மோதி
ஐ.எஸ்.ஆர்.ஓ. பொறியாளர் பலி


October 24, 2015 at 12:20 pm

நாகர்கோவில், அக்.24

நாகர்கோவிலில் மினி லாரி மோதி ஐ.எஸ்.ஆர்.ஓ. பொறியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமேஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (48), ஐ.எஸ்.ஆர்.ஓவில் பொறியாளராக இருந்து வந்தார். இவர் இன்று விடுமுறை ஆகையால் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல தனது பைக்கில் வெட்டூர்ணிமடம் வந்தபோது எதிரே காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த மினிலாரி கண் இமைக்கும் நேரத்தில் இவரது பைக் மீது மோதியது. இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News