தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

தலையங்கம்: மறந்து போன பள்ளிக் கல்வி சற்றுலா


October 24, 2015 at 9:01 pm

 

 

நாடு முழுவதும் உள்ள 78 பிரபல கலங்கரை விளக்கங்களை, அவற்றின் தொன்மை மாறாமல், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 நாட்டில் உள்ள 7,000 கி.மீ. நீள கடற்கரையில் 189 கலங்கரை விளக்கங்கள், இயற்கை சூழலில் அமைந்துள்ளன. மக்களே செல்ல முடியாத அழகான இடங்களில் பல கலங்கரை விளக்கங்கள் உள்ளன. காரணம் அந்த இடங்களுக்கு செல்ல போதிய சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததே.

 எனவே கலங்கரை விளக்கங்களை பொதுமக்கள் பார்வையிட அந்த பகுதிகளில் அடிப் படை வசதிகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முதல்கட்டமாக நாட்டில் உள்ள 78 கலங்கரை விளக்கங்களை, தனியாருடன் இணைந்து மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 கலங்கரை விளக்கம் என்றால் அது ஏதோ அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்திற்கு செல்ல அனுமதிப்பார்களா என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி உள்ளது.

ஆனால் கலங்கரை விளக்கங்களை பார்வையிட குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து சென்றனர். ஆசிரியர்கள் இதுபோன்ற கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் போன்றவற்றைத்தான் மாணவர்களுக்கு சுற்றி காண்பித்து வந்தனர்.

 ஆனால் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்வது இப்போது அறவே நின்று விட்டது.

காரணம் மாணவர்களின் படிப்புக்கு மட்டுமே ஆசிரியர்களும், பெற்றோர்களும் முன்னுரிமை அளிக்கின்றனர். வாழ்க்கையில் மதிப்பெண் மட்டும் போதும் என்ற மனோபாவம் மக்களிடையே வளர்ந்து விட்டதே இதற்கு காரணம்.

குறிப்பாக கன்னியாகுமரியில் உள்ள கலங்கரை விளக்கத்தை இந்த மாவட்டத்தை சேர்ந்த எத்தனை மாணவர்கள் சென்று பார்த்துள்ளனர்? அறிவியல் தொடர்பான படிப்புக்கு உறுதுணையாக இருக்கும் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தை எத்தனை பேர் பார்த்துள்ளனர்-?

அறிவியல் படிக்கும் மாணவர்கள் பார்க்க வேண்டிய ஒரு பொக்கிஷம் நெல்லை அறிவியல் மையம். அறிவியல், கணிதம் உள்ளிட்ட பன்முக அரங்கங்களை இங்கு பார்க்கலாம். அறிவியல் படிக்கும் மாணவர்கள் இந்த அரங்கங்களை பார்த்தால் எளிதில் அறிவியலை புரிந்து கொள்ள முடியும். அதைக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து சென்று காட்டவில்லையே என்ற ஆதங்கம்தான் உள்ளது. வேண்டுமானால் நெல்லை நகரத்தில் உள்ள மாணவர்கள் அந்த மையத்தை பார்வையிட்டு இருக்கலாம். மற்ற மாவட்ட மாணவர்கள் பார்வையிட்டார்களா என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது.

சில பள்ளிகள் மாணவர்களை கல்வி சுற்றுலா என்ற பெயரில் கோடைவாச ஸ்தலங்களுக்கு அழைத்து செல்கின்றனர். மாறாக மாணவர்களை கல்வி சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லவேண்டும்.

எனவேதான் மாணவர்கள்  கலங்கரை விளக்கங்களை பார்வையிட்டு அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் முதல்கட்டமாக மாமல்லபுரம், முட்டம், உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆசிரியர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

இதன்மூலம் மாணவர்களின் படிக்கும் ஆற்றலை மேம்படுத்துவதோடு சிந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்து செல்ல கல்வித்துறை பல விதிகளை பின்பற்ற வலியுறுத்தி உள்ளது. சுற்றுலா நிகழ்ச்சிகளின் போது பல மனகசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. எனவேதான் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து சுற்றுலா செல்லும் மாணவர்களின் பெயர், வழிநடத்தும் ஆசிரியர் பெயர் எந்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டம் போன்ற விவரங்களை முன்கூட்டியே தயாரித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்து முன்னனுமதி பெறவேண்டும் என்பது அந்த விதி முறைகளில் முக்கிய அம்சமாகும்.

சுற்றுலா சென்ற இடங்களில் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள விரும்பாத பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் மாணவர்களை அழத்துக் கொண்டு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News