+2 சிபிஎஸ்சி  தேர்வில்  பார்வையற்ற மாணவி , உதவியாளர்யின்றி 90 சதவிகித மதிப்பெண் பெற்று  இந்தியா அளவில் சாதனை -தமிழக முதலமைச்சரை சந்திக்க முடிவு        குமரி மாவட்டத்தில்  தானியங்கி மழை மானி அமைக்கும் பணி கலெக்டர்  நேரில் பார்வையிட்டார்      100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு  108 பால்குடம் எடுத்து செல்ல ஊர் காவடி கூட்டத்தில் தீர்மானம்
 


December 18, 2020 at 5:08 pm

தக்கலை, டிச. 18 

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு 108 பால்குடம் எடுத்து செல்ல ஊர் காவடி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 32 ஊர் காவடி கூட்டம் இரணியில் நடந்த 32 ஊர் காவடி கூட்ட நிகழ்ச்சிக்கு ஊர் காவடி கமிட்டி ஒருங்கிணைப் பாளர் மணிகண்டன் தலைமை தாங்க, இணை பொறுப்பாளர் வினிஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இந்து முன் னணி தலைவர் சோமன் வழிநடத்தினார். கூட்டத் தில் தேர்வு செய்யப் பட்ட ஊர் காவடி நிர்வாகிகள் விவரம் வருமாறு, தலைவராக குலசேகரம் ராஜேந்திரன், பொதுச் செயலாளர்கள், பெருமாள் பிள்ளை, மணிகண்டன் நாயர் மேலும் தலா ஆறு துணைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், 18 செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப் பட்டனர். 108 பால்குடம் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முருகப் பெருமானின் பிறந்த தினமான வைகாசி விசா கத்தில் கொல்லன்விளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News