தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்... பெரும் சோகத்தில் திரையுலகம்

 


July 15, 2022 at 6:53 pm

சென்னை :

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 70. மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா இவெற்றி விழா இமை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி இலக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். பிரதாப் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் படங்களில் நடித்துள்ளார்.   நடிகர் இஇயக்குனர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளராகிய பன்முக தன்மையை கொண்ட பிரதாப் போத்தன் 1980ல் தனது திரைப்பட திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு இமலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குனர் படத்திற்கான இந்திரா காந்தி விருது,  கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். கதாநாயகனாக சில படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை வென்றவர் நடிகர் பிரதாப் போத்தன். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் தான் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழில் முதல்முறையாக கமலின் வெற்றி விழா படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர் பிரதாப் போத்தன்.    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்து 1986ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.  அத்துடன் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த இவர் 2012ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News