தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

பேச்சிப்பாறை கோதையாறு சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியின் போராட்டம்.
 


July 12, 2023 at 6:03 pm

பேச்சிப்பாறை சீறோபாய்ன்ட் முதல் கோதையார் வரையிலான 15 கிலோமீட்டர் தூரம் பிரதான சாலையினை முழுமையாக உயர் தரத்தில் செப்பனிட பல்வேறு அமைப்புகள் வாயிலாகவும் ஊர்மக்கள் சார்பாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் சரி செய்யப்படவில்லை.  தமிழ்நாடு மின் வாரியத்தின் பராமரிப்பின் கீழிருந்த இச்சாலையானது குமரி மாவட்ட மலையோர கிராமங்களான மூக்கரைக்கல், பெருங்குருவி, அடகாடு, மல்லமுத்தன்கரை, மோதிரமலை, கோலிஞ்சிமடம், சின்னமோதிரமலை, மாங்காமலை, விளாமலை, முடவன்பொற்றை, தச்சமலை, களப்பாறை, பின்னமூட்டுதேரி, நடனம்பொற்றை, கொடுத்துறை, மணலிக்காடு, ஆகிய மலைவாழ் கிராமங்களும், கோதையார் மின் வாரிய பகுதியும், கோதையார் சந்தை பகுதி,  அரசு ரப்பர் கழக பகுதிகளான மைலார், மைலார் 52, மைலார் சரகம் 4 மற்றும் 5, குற்றியார், கல்லார், கிழவியார் மற்றும் சிற்றார் ஆகிய தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளும், அரசு பள்ளிக்கூடங்கள், நியாயவிலை கடைகள், அஞ்சலகம், போன்றவைகளுக்கு செல்லும் சாலையாகும்.  இச்சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த இயலாவண்ணம், அடிக்கடி விபத்தை ஏற்படுத்தியும், வாகனங்கள் பழுதுபட்டும் பயணிகள் கடும் அவதியுறும் விதமாக காணப்படுவதால் அரசின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேற்குறிப்பிட்ட பிரதான சாலையையும் கிளை சாலைகளையும் உயர்தரத்தில் செப்பனிட கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக சீரோ பாய்னட் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இந்நிகழ்வில் பேச்சிப்பாறை ஊராட்சி செயலாளர் சகில் குமார், கனகமணி, ராஜேஷ்வரி, குமார், மரிய செல்வி, செல்ஜின் பெனட், விஜயராகவன், சாரா, பிரசாந்த், குயின்ஸ்மேரி, சுஜின் மற்றும் குமரி மத்திய மாவட்ட செயலாளர் சீலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.    

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News