தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

 கெஸ்டோசிஸ் இந்தியா சார்பில்   ஓசூரில்3 நாட்கள் உச்சி மாநாடு 
 


July 12, 2023 at 6:05 pm

ஓசூர், ஜூலை 10- ஓசூரில் கெஸ்டோசிஸ் இந்தியா அமைப்பு சார்பில் மூன்று நாட்கள் உச்சி மாநாடு நடைபெற்றது.   கர்ப்ப காலத்தில் தாய் மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய் உயிரிழப்புகளை தடுப்பது, சுகப்பிரசவம் ஆகியவை குறித்து தொழில்துறை வல்லுநர்கள் மருத்துவர்கள், செவிலியர்க ளிடம் விளக்க உரையாற்றினர். இந்திய அளவில் செயல்பட்டு வரும் கெஸ்டோசிஸ் இந்தியா அமைப்பினர் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளு க்கு உருவாகும் ரத்த அழுத்தத்தை ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை முறைகளை வழங்கி வருகின்றனர். மேலும் கர்ப்ப காலத்தில் தாய்மார்களை ரத்த அழுத்தம் மட்டுமின்றி ஏராளமான நோய்கள் தாக்கி வருகின்றன. இதனால் தாய்மார்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு இறப்புகள் அதிகரிக்கின்றது. இதனை தடுக்க உலக தரம் வாய்ந்த வெளிநாட்டு சிகிச்சை முறைகள் மூலம் இந்தியாவில் சிகிச்சை செய்யபடுகிறது. கெஸ்டோசிஸ் இந்தியா அமைப்பு சார்பில் ஓசூர் தனியார் ஹோட்டலில் மூன்று நாட்கள் உச்சி மாநாடு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஜூலை 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கர்ப்ப காலத்தில் தாய்மார் களை பாதுகாக்கும் சிகிச்சைகள் குறித்த பல்வேறு பயிற்சி பட்டறைகள், நேரடி செயல் விளக்கங்கள் மற்றும் பயிற்சி கள்  வழங்கப்பட்டன. மேலும் முதுகலை மாணவர்களுடன் மருத்துவர்கள் கலந்தாய்வுகளையும் நடத்தினர். இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட  மருத்துவர் ஷர்மிளா கூறும்போது,  இந்த மூன்று நாள் மாநாட்டில், கர் ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து எப்படி குழந்தைகளின் வளர்ச்சியை காண முடியும் என்றும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை தடுத்து அவர்களை எப்படி காப்பாற்றுவது  என்பது குறித் தும்  மூத்த வல்லுனர்கள் தங்களின் விரிவான விளக்கங்களை  அளித்தனர். மேலும் சுக பிர சவங்கள்,தாய் சேய் உயிரிழ ப்புகளை தடுப்பது போன்றவை குறித்தும் இந்த மாநா ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டன.  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News