தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு

மறியலில் ஈடுபட்ட சிஐடியு நிர்வாகிகள் 60 பேர் கைது
 


July 12, 2023 at 6:06 pm

நாகர்கோவில் ஜூலை 12 நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சிஐடியுவை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்தனர் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியார் கைகளில் தாரை வார்க்கும் அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் அவுட்சோர்ஸிங் முறையை கைவிட வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் தினக்கூலி சுய உதவிக் குழு ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் நகர்புற உள்ளாட்சிகளில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூபாய் 690 ஐ  இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழங்க வேண்டும் டெங்கு பணியாளர்கள் அனைவரையும் முழு நேரப் பணியாளர்களாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூபாய் 690 ஐ வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டி யூ தொழிற்சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தாஸ் தலைமை வகித்தார் கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுடலை முன்னிலை வைத்தார் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகனன்  மாவட்டத் தலைவர் சிங்காராயன்  மாநில குழு உறுப்பினர் அந்தோணி உட்பட கலர் கலந்து கொண்டனர் பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது அவர்களை போலீசார் கைது செய்தார் மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர்   

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News