தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 
 


January 10, 2024 at 5:04 pm

நாகர்கோவில், ஜன 11  தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சன்னிதானத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம் & மஞ்சள் இளநீர் பன்னீர் தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன & இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் & பக்தர்களுக்கு லட்டு பஞ்சாமிர்தத்துடன் பிரசாதங்கள் வழங்கப் பட்டு வருகின்றன &  ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா  நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன அந்த வகையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த.   ஆஞ்சநேயர்  ஜெயந்தி விழாவில் காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் எதிரே அமைந்துள்ள ராமபிரானுக்கு அபி«Ôகங்கள் முடிந்த பின் 18 அடி உயர வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயருக்கு ஷோடச அபிஷேகம் நடைபெற்று வருகிறது அதாவது மஞ்சள், இளநீர், நல்லெண்ணெய், களபம், பன்னீர், தேன், பால், அரிசி, தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு தொடர்ந்து அபி«Ôகங்கள் நடைபெற்று வருகின்றன இந்த அபிஷேகங்களை காண்பதற்காகவும் தரிசனம் செய்வதற்காகவும் குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் &   ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு பிரசாதத்துடன் லட்டும் பஞ்சாமிர்தமும் வழங்கப்பட்டு வருகின்றன  நேற்று  நண்பகல் அன்னதானமும்  மாலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பும் அதனை தொடர்ந்து 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு கழுத்து வரை நிறையும் வகையில் புஷ்பாபிஷேகம் அதனை தொடர்ந்து இரவு பத்து மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் ஜெயந்தி விழா நிறைவு பெறும் & ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏரளமான போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் . 

 

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News