தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

75-வது குடியரசு தினவிழா-
கலெக்டர் ஸ்ரீதர், தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
77 காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்  
 


January 26, 2024 at 5:01 pm

நாகர்கோவில் ஜனவரி 27

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 75-வது குடியரசு தின விழா  மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர்ஸ்ரீதர்.  தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பின்னர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களை பறக்கவிட்டார்

அதனைத்தொடர்ந்து, காவல்துறையை சார்ந்த 77 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

 

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.201.962 இலட்சம் மானியமும், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை 1 பயனளிக்கு ரூ.1.80 இலட்சம் மானியத்தில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயந்திரம், 1 பயனாளிக்கு ரூ.2.87 இலட்சம் மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி. 3 பயனாளிக்கு தலா ரூ.15,000 மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட், 1 பயனாளிக்கு ரூ.14,501 மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்களும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 பணியாளர்களுக்கும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி. மருத்துமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகியோருக்கும். அரசின் திட்டங்கள் குறித்து கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராமிய பாடகர்கள் 2 நபர்களுக்கும், விளையாட்டுத்துறையின் சர்வதேச

 

மற்றும் தேசிய அளவிலான தடகளம், டேக்வேண்டோ யோகா மற்றும் செஸ் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் 4 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர்.  பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 2 பயனாளிக்கு 2023-24-க்கான சிறந்த விவசாயிக்கான விருதும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் 2022-23-க்கான மாவட்ட அளவிலான சிறந்த விடுதி மற்றும் சிறந்த காப்பாளினிகளுக்கு காசோலை மற்றும் நற்சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 மாணவனுக்கு தனித்திறமை வாய்ந்த மாற்றுத்திறனாளி என்ற பாராட்டு சான்றிதழ்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 20 ஆண்டுகள் விபத்துயின்றி வாகனம் ஒட்டிய 1 வாகன ஒட்டுநர்க்கு 4 கிராம் தங்க பதக்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாவட்ட  கலெக்டர் ஸ்ரீதர்.   வழங்கினார் இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்.  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்,. நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் .மேரி பிரின்சி லதா. உதவி ஆட்சியர் (பயிற்சி) சஜத் பீட்டன். . நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் .சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் .சங்கரநாராணன் (பொது), .கீதா (வேளாண்) ண்மை இணை இயக்குநர் .ஆல்பர்ட் ராபின்சன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) .ஷியா ஜாண் திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), ..பீஜோண் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .குழந்தை சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் .விமலா ராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் .கனகராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் .சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்  ஜெயந்தி, செயற்பொறியாளர்கள் ஜோதி பாஸ் நீர்வளத்துறை). வெள்ளச்சாமி (கட்டடம்), பாஸ்கர் (நெடுஞ்சாலைதுறை), ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ் பயஸ், வருவாய் வட்டாட்சியர்கள் கண்ணன் (அகஸ்தீஸ்வரம்), உசூர் மேலாளர் (நிதியியல்) ஜீவியன், தனி வட்டாட்சியர் கோலப்பன் (பழங்குடியினர்). நாகர்கோவில் வட்டாசியரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், மட்டாசியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News