+2 சிபிஎஸ்சி  தேர்வில்  பார்வையற்ற மாணவி , உதவியாளர்யின்றி 90 சதவிகித மதிப்பெண் பெற்று  இந்தியா அளவில் சாதனை -தமிழக முதலமைச்சரை சந்திக்க முடிவு        குமரி மாவட்டத்தில்  தானியங்கி மழை மானி அமைக்கும் பணி கலெக்டர்  நேரில் பார்வையிட்டார்      100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 75வது குடியரசு தின விழா


January 26, 2024 at 5:08 pm

! தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நம் நாட்டின் 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  அவர் தனது குடியரசு தின உரையில் "வங்கியின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து உடமைதாரர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட்  வங்கியானது பெயர்பெற்ற ஒரு பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 102 ஆண்டுகளாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் 547 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்  குடியரசு தின விழாவில் வங்கியின் தலைமை கணக்கு அதிகாரி, பொது மேலாளர்கள், துணை மற்றும் இணை பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News