எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு

திருபுவனம் கும்பகேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ரவி வருகையால் பக்தர்கள் அவதி


February 2, 2024 at 2:18 pm

கும்பகோணம்: திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையால் பக்த்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஆளுநர் வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் தரிசனத்துக்கு தாமதமாவதற்காக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோயில் குடமுழுக்கையொட்டி அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருக்கும் நிலையில் தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ரவி வருகையால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரவி வருகையால் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோயிலில் இருந்து ஆளுநர் ரவி வெளியே வந்த பிறகுதான் பக்தர்கள் உள்ளே அனுமதிப்போம் என்றதால் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News