தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

     ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு
 


March 14, 2024 at 6:15 pm

புதுடெல்லி, மார்ச் 14  ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. அந்த குழு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பிடம் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த குழு தற்போது ஆலோசனைகளை முடித்துக்கொண்டு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்நிலையில் அந்த அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தாக்கல் செய்தது. 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் தாக்கம், பலன்கள் குறித்து அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமே. முன்கூட்டியே திட்ட மிட்டால் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழி உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம். 2029&ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களில் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News