தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

  அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  
 


March 14, 2024 at 6:16 pm

சென்னை. மார்ச் 14  அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர். இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், 2022&ம் ஆண்டு டிசம்பர் 14&ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News