தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
 


March 15, 2024 at 6:05 pm

 "அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை புறப்பட்டிருக்கிறது. இது நீண்டதூரம் பயணிக்க போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டதுபோன்று 1991-ல் நான் ஏக்தா யாத்திரா புறப்பட்டு கஷ்மீர்வரை சென்றிருந்தேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ளேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு காஷ்மீர் மக்கள் நல்ல பாடம் புகட்டினார்கள். இங்கும் அதுதான் நடக்கப்போதுகிறது. தி.மு.க, காங்கிரஸ் துடைத்தெறியப்படும். காங்கிரஸ் -தி.மு.க கூட்டணியின் வெற்றி தலலைக்கனம் முற்றிலும் அழிக்கப்படும். திமுக காங்கிரஸ் இந்தியா கூட்டணியால் தமிழகத்தில் எந்த வளர்ச்சித்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களின் வரலாற்றில் மோசடியும், ஊழலும் முதன்மையாக இருக்கிறது. அரசியலில் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் அவர்களுக்கு உள்ளது. பாஜக-வில் மக்கள் நல திட்டங்கள் ஏராளமாக உள்ளன. பா.ஜ.க ஆட்சியில் மக்கள் வளர்ச்சிப்பணிகள், ஆர்ட்டிக்கல் பைபர், 5ஜி ஆகியவற்றை மக்களுக்கு கொடுத்திருக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணி 2ஜி ஊழல் செய்துள்ளது. அதில் பெரும் பங்கு வகித்ததது திமுகதான். பாஜக நிறைய விமான நிலையங்களை கட்டியது. ஆனால் இண்டியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புக்கான கெலிகாப்டர் ஊழல் இருக்கிறது. நம்மிடம் கேலோ இந்தியா திட்டம் உள்ளது. உன்னதமான அந்த திட்டம் மூலம் விளையாட்டு துறையை உன்னதமான இடத்துக்கு கொண்டுசென்றுள்ளோம். ஆனால், அவர்களிடம் ஊழல்தான் உள்ளது. கனிமவளத்துறையில் நாம் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளோம். ஆனால், இந்தியா கூட்டணியில் நிலக்கரியில் ஊழல் நடந்துள்ளது. இந்த பட்டியல் மிக நீளமானது. அதுதான் இண்டியா கூட்டணியின் உண்மையான நிலைமை. கன்னியாகுமரி எப்போதும் பாஜக-வுக்கு ஏராளமான அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணிகள் இங்குள்ள மக்களை சுரண்டலாம் என வாப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக அவர்களின் செயல்பட்டை பார்த்தால் அது நமக்கு தெரியும். வாஜ்பாய் வடக்கு தெற்கை இணைத்துள்ளார். நரிக்குளம் பாலம் கிடப்பில் போடப்பட்டிருந்து. 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் பால பணிகள் நிறைவேற்றப்பட்டன. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்குவழி சாலைக்கு அனுமதி கொடுக்கப்படமால் இருந்தது. அதற்காக கூடுதல் நிதியை கொடுத்ததால் தான் பணியை தொடங்கமுடியும் என்ற நிலை இருந்தது. நாம் அதிக நிதி கொடுத்து அதை செயல்படுத்தினோம். மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களை மக்கள் கேட்டார்கள் பாஜக வந்தபிறகுதான் பாலம் அமைந்தது. 40 ஆண்டுகளாக இரட்டை ரயில் கனவை மக்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மிக விரைவாக பணி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் செயல்படுத்தப்படும்.  தமிழ்நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்த மிகவும் தீவிரமாக உள்ளோம். கடந்த மாதம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கண்டெய்னர் டெர்மினலுக்கு அடிக்கல் நாட்டினேன். மீனவர்கள் நலனுக்காக நவீன மீன்பிடி படகுகளுக்கு நிதி உதவி, கிஷான் கிரெடிட் கார்டு வரம்புக்குள் மீனவர்களை கொண்டுவந்து என மீனவர்களின் கவலைகளை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகள நினைத்துப்பார்க்கிறேன்.  சாலை, ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்துவிட்டன. 70 ஆயிரம் கோடிக்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்கள் கூட்டணியில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரயில்வே துறையில் 800 கோடி ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் நாம் 6300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம். திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல, கடந்தகால பாரம்பர்யத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி. அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்கு முன் நான் தமிழ்நாட்டுக்கு வந்து கோயில்களில் வழிபாடு நடத்தினேன். ஆனால், பிராண பிரதிஸ்டை அன்று அயோத்திக்கு அவர்கள் வரவில்லை. அதை பார்க்கவில்லை. தமிழகத்தில் பார்ப்பவர்களுக்கும் தடை விதித்தார்கள். அதை உச்சநீதிமன்றம் கண்டித்தது. அந்த அளவுக்கு அவர்கள் செயல்படுகிறார்கள். தமிழகத்தின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க பா.ஜ.க முன்னணியில் நிற்கிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை செய்தபோது திமுக மவுனம் காத்தது. பாரம்பர்ய விளையாட்டை அழிக்கபபார்த்தார்கள். ஆனால் அதை பா.ஜ.க மீட்டெடுத்தது. தமிழகத்தின் பெருமைக்குரிய பாரம்பரியமிக்க சிறப்பு அம்சத்தை மோடி இருக்கும்வரை காப்பாற்றுவேன். புதிய நாடாளுமன்றத்தில் தமிழரின் பெருமையை நிலைநாட்ட செங்கோல் நிறுவினோம். அதை திமுக புறக்கணித்தது. இனி தமிழர் பாரம்பர்யத்தை அழிக்க விடமாடோம். கன்னியாகுமரியில் இருந்து உங்கள் ஆதரவையும் குரலையும் கேட்டு டெல்லியில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெட்டுப்போய்விட்டது. உங்கள் அன்பும் பாசமும் ஆதரவும் எனக்கு மட்டும் அல்ல மொத்த இந்தியாவுக்கும் பலம்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் நம் மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அவர்களுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும், உயிரோடு திரும்பமுடியாது என்றார்கள். நான் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. எத்தனை வழிகள் உண்டோ அத்தனையும் உடைத்தோம். எந்தவித சேதாரமும் இல்லாமல் அவர்களை மீட்டுவந்தோம். நம் மீனவர்கள் எதற்காக அவர்கள் எல்லைக்கு போக வேண்டும். யார் செய்த தவற்றுக்காக அவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். நம் அரசு மீனவர்களுக்கு என்றும் துணை நிற்கும். நீங்கள் யாரும் செய்த குற்றம் அல்ல, நாங்க செய்த குற்றமும் அல்ல, திமுக காங்கிரஸ் செய்த குற்றம். அவர்கள் மக்கள் கண்ணில் புழுதி வாரி தூற்றிவிட்டு செயல்படுகிறார்கள். மக்கள் கண்களில் விழுந்த தூசி இந்தியா கூட்டணி. மீனவ மக்கள் இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். பொங்கி எழுவார்கள். தங்கள் பாவ கணக்குக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் கேட்பது நீங்கள். மத்தியில் நம்முடைய அரசு எப்போதுமே பெண்களுக்கான அரசு. பெண்களை முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு. ஆனால் இந்தியா கூட்டணிக்கு பெண்களை ஏமாற்ற, அவமானப்படுத்தாத்தான் தெரியும். இந்த மேடையை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் நம் அரசு இன்னும் அவர்களை மேன்மை அடைய வழிசெய்யும். உங்க பாசத்தை உணர்கிறேன். என்னால் தமிழ்மொழி கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற குறை இருக்கிறது. அந்த குறையை போக்க டெக்னாலஜியை பயன்படுத்தி தமிழில் பேச இருக்கிறேன். எக்ஸ் வலைதளத்திக் நமோ ஆப் மூலம் தமிழில் பேச இருக்கிறேன். இனி நான் சொல்ல நினைக்கும் செய்தியை தமிழில் சொல்ல முடியும். உங்கள் அன்புக்கு முன் எதுவும் சொல்ல தோன்றவில்லை அந்த வாய்புக்களுக்கு நன்றி கூறுகிறேன். நம்முடைய தமிழ் மொழிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழில் பேச ஆசைப்படுகிறேன்" என்று உரையை முடித்துக் கொண்டார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன். ஜான் பாண்டியன். சரத்குமார், சசிகலா புஷ்பா மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ .வி.ஸி. காந்தி. வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..... குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் அதில் இந்தியா   கூட்டணி ஊழல் நிறைந்த கூட்டணி  நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ஹெலிகாப்டர் ஊழல் 2ஜி ஊழல் போன்ற ஊழல்கள்தான்  இந்தியா கூட்டணியின்  சாதனையாகும் எனவும் பாஜக பல நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று உள்ளது இந்தியா கூட்டணியை வெகுவிரைவில் மக்கள் தூக்கி ஏறிவார்கள் எனவும் பேசினார்*     

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News