நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.*

 


March 22, 2024 at 5:33 pm

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.* திருச்செந்துார், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும் உபகோயிலான நாலுமூலைக்கிணறு, அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலிலும் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை நாளை மறுநாள் பங்குனி உத்திரம் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருநாளில் திருச்செந்தூர் திருக்கோயிலில் அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மேலும், வரும் 24-ம் தேதி இத்திருக்கோயிலின் உபகோயிலான குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். சேவார்த்திகளுக்கு குடிநீர், மின்வசதி, பந்தல் வசதி அனைத்தும் திருக்கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 24-03-2024 -ல் (ஞாயிறு) நாளை மறுநாள் பங்குனி உத்திரம் அன்று நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் விவரம்: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, அதிகாலை 3:30 விஸ்வரூபம் தரிசனம், அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 6:00 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தவசு மண்டபம் புறப்படுதல், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தபசில் உள்ள வள்ளி அம்பாளை அழைத்து வர சுவாமி புறப்பாடு, அதன் பிறகு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு காட்சியருளி தோள்மாலை மாற்றி திருவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்தல். இராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 9 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என திருக்கோயில் சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News